பிரிந்தவர்கள் மீண்டும் இன்று கூடுகிறார்கள்!

Date:

ஆளும் பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 11 பங்காளிக்கட்சிகள், பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தவர்களை ஜனாதிபதி கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் 11 யோசனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கக் கொள்கை முடிவுகளை வகுப்பதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட தேசிய நிறைவேற்று சபையை நிறுவுதல், அதன் பரிந்துரையின் பேரில் புதிய பிரதமர் நியமனம், இடைக்கால அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையான அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் எண்ணிக்கையை தர்க்கரீதியாக நிர்ணயித்தல் ஆகியவை அந்த யோசனைகளில் அடங்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் களவு குற்றச்சாட்டு – நான்கு சந்தேகநபர்கள் மாவட்ட குற்றதடுப்பு பிரிவால் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் களவு குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்...

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்!

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்