29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நாடு முழுவதும் எம்மை ‘கழுவி ஊற்றுவது’ புரிகிறது: எஸ்.பி.திஸாநாயக்க!

இன்று மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்காக மன்னிப்பு கோருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

எங்கள் மீது மக்கள் சாபமிடுவதைப் பற்றி அரசாங்கம் ஆச்சரியப்படவில்லை. அரசாங்கம் பொதுமக்கள் மீது எந்த கோபத்தையும் கொண்டிருக்கவில்லை என்றார்.

எரிபொருள், எரிவாயு அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஒரு நாள் முழுவதும் வரிசையில் நிற்க நிர்பந்திக்கப்படும்போது, ஜனாதிபதி, ராஜபக்ச குடும்பம் மற்றும் அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் கோபமும் வெறுப்பும் புரிகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்காக அரசாங்கம் உண்மையிலேயே வருந்துவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, அரசாங்கம் பொதுமக்களின் குறைகளை உணர்ந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம் உலகில் எந்த நாடும் எதையும் சாதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment