தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்!

Date:

2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி
அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்  சாதாரண தரம் வரையிலான அரச
பாடசாலைகள் பிரிவில் தேசிய மட்டத்தில்  முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச்
சாதனை படைத்துள்ளது.

நேற்றைய தினம் 08.11.2026  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில்  இடம்பெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் விழாவில், நாட்டின்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம், பாடசாலை அதிபர் திருமதி ஜெயா
மாணிக்கவாசன் தலைமையிலான குழுவினர் இவ்விருதைப் பெற்றுப் பெருமை
சேர்த்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, கிளிநொச்சி
மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், மாகாண எல்லைகளைக் கடந்து தேசிய
அளவிலும் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இதற்கு முன்னரும் சிறந்த சுற்றுச்சூழல் பாடசாலைக்கான
விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பலவற்றை வென்றெடுத்த பெருமை
அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்குக் உண்டு.

பாடசாலையின் அதிபரின் தூரநோக்குச் சிந்தனையிலான சிறந்த தலைமைத்துவம்,
அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாணவர்களின்
தீவிரப் பங்களிப்பு, அத்துடன் பெற்றோர் மற்றும் கிராமியச் சமூகத்தின்
தொடர்ச்சியான பேராதரவு ஆகியவையே அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம்
தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக முன்னிலையில் திகழ்வதற்குக் காரணம் எனப்
பாடசாலைச் சமூகம் பெரும்மிதத்துடன் குறிப்பிடுகிறது. இத்தகைய கூட்டு
முயற்சியும் ஒற்றுமையுமே இமாலய சாதனைகளுக்கு வித்திட்டுள்ளதாக அவர்கள்
பெருமிதம் கொள்கின்றனர்..

spot_imgspot_img

More like this
Related

பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு...

இந்தியாவிற்கு ஆடு கடத்தியவர்கள் சிக்கினர்

இலங்கை கடற்படையினர் நேற்று (09) புத்தளம், உச்சமுனைக்கு அப்பால் உள்ள கடல்...

தட்டம்மை பரவல்: 3 சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படவில்லை!

தட்டம்மை நோய் பரவல் காரணமாக, மூன்று சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்