கோட்டாவின் சோதிடர் ஞானாக்காவின் வீடு முற்றுகை; தாக்குதல்!

Date:

அநுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண் சோதிடரின் வீட்டை நேற்று (04) இரவு பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களின் சோதிடரான ஞானாக்கா என்ற பெண்ணின் வீடும், காளி கோயிலும் அனுராதபுரம் விமான நிலைய வீதியில் உள்ள இசுருபுர பகுதியில் உள்ளது.

இன்று பெருமளவான போராட்டக்காரர்கள் ஞானக்காவின் வீட்டை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தினர். அத்துடன் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

அந்த பகுதியில் கடமையில் இருந்த பொலிசாரால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர்.

ஞானாக்காவின் வீடு, வழிபாட்டிடத்திற்கு இராணுவமும் பொலிசாரும் பாதுகாப்பு வழங்கினர்.

ஞானாக்காவின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்