ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஒரே நாளில் இரண்டு முறை ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் கூடுகிறார்கள்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி இந்த விவாதத்தின் போது முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முற்பகல் 11.30 மணிக்கு ஆளுங்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1