போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்று மாட்டினார் மன்னார் இளைஞன்!

Date:

போலி இத்தாலிய குடியுரிமை விசாவை பயன்படுத்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய் வழியாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞர், இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மன்னாரை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைதாகினார்.

அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய்க்கு,  இன்று அதிகாலை 02:10 மணிக்கு புறப்படும் FZ-558 இலக்க ஃப்ளை துபாயில் பயணிக்க விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரது இத்தாலிய குடியுரிமை விசா உள்ளிட்ட ஆவணங்களில் சிக்கல் ஏற்பட்டதால், விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவுக்கு அவர் அனுப்பப்பட்டார்.

அங்கு, அதிகாரிகள் ஆவணங்களை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் அவர் சமர்ப்பித்த இத்தாலிய குடியிருப்பு விசாவில் போலி தகவல்கள் மற்றும் மோசடிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர் முன்பு பயன்படுத்தி ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட்டில்  இலங்கை மற்றும் இத்தாலியின் குடிவரவு துறைகளின் முத்திரைகள் போலியாக இடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அவர் தனது தற்போதைய பாஸ்போர்ட்டின் பக்கங்களையும் அகற்றி போலி பக்கங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. அவர் தனது தற்போதைய வதிவிட விபரங்களை மறைக்க இதன செய்திருந்தார்.

விமான நிலைய சிஐடியினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...

நெல்லியடி பொதுச்சந்தை மலசலகூடங்களில் சுகாதார சீர்கேடு

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மரக்கறி சந்தையில் காணப்படும் மலசல கூடங்கள் சுகாதார...

ஆயுதப்பற்றாக்குறையால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்த முடிவு: ட்ரம்ப்பிற்கு ஏற்பட்ட அவல நிலை!

தொடர்ச்சியாக 13 நாட்கள் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான தாக்குதல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்