பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படலந்த சிங்கபுரவில் காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் சிங்கபுர, இரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய புன்சிறி புஷ்பகுமார மற்றும் 31 வயதுடைய தினேஷ் மதுஷங்க (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் இலங்கை மின்சார சபையின் ஊழியர் எனவும் மற்றையவர் பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.45 மணியளவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் தோண்டுவதற்காக இரியமுல்லை வயல்வெளிக்கு சென்றுகொண்டிருந்தபோது, காட்டுப்பன்றிகளிற்காக வைக்கப்பட்ட சட்டவிரோத மின்கம்பியில் சிக்கினர்.
இருவரும் அன்றிரவு கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.



