30.5 C
Jaffna
April 18, 2024
இந்தியா

வலியின்றி சாவது எப்படி?: யூடியூப் பார்த்து இளைஞன் எடுத்த விபரீத முடிவு; அமானுஷ்யத்திற்கு அடிமையானதால் சம்பவம்!

யூடியூப்பில் வீடியோ பார்த்து வலிக்காமல் தற்கொலை செய்வதாக நினைத்து கடலில் குதித்து மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அரங்கேறி உள்ளது. அமானுஷ்யத்திற்கு அடிமையானதால் இந்த ழ்ந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த புத்தன்விளை பகுதியை சேர்ந்த ஹரிலால் மூர்த்தி, பிந்து தம்பதியரின் மூத்த மகன் மிதுன். 22 வயதான இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4ஆம் ஆண்டு எஞ்சினியரிங் படித்து வந்தார்.

ஹரிலால் மூர்த்தி வௌிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா காலம் என்பதால் மிதுன் வீட்டில் இருந்தே ஆன் லைன் வகுப்பில் படித்து வந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி காலை வீட்டில் இருந்து ஆன் லைன் தேர்வு எழுதிய மிதுன் தேர்வு விடை தாள்களை கோர்த்து கட்டுவதற்கு நூல் வாங்கி வருவதாக கூறி தாயிடம் 100 ரூபாயை வாங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் தாய் பிந்து திருவட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்

புகாரின் பேரில் மிதுன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் அவர் வீட்டில் விட்டு சென்ற செல்போன் ஐ ஆய்வு செய்தனர். அப்போது அதில் கிடைத்த தகவல் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தது.

சிறு வயதில் ஆரம்ப பள்ளி படிப்பை வெளிநாட்டில் முடித்த மிதுன் கவிதை, கட்டுரை, அமானுசிய கதைகள் போன்றவற்றில் நாட்டமுடையவராக இருந்துள்ளார். இணையதளங்களில் த்ரில் மரணங்கள், வாழ்க்கையின் இருள் பக்கங்கள், த்ரில் தற்கொலைகள் அமானுசியங்கள் என தேடித்தேடி படித்ததோடு அது சம்பந்தமாக கருத்துக்களையும் பதிவிட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் தன்னை ஒரு த்ரில் கேரக்டராகவே பாவித்து வாழ்ந்து வந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் இவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

தற்போது ஆன்லைன் படிப்பிற்காக தனியறையில் இருந்த அவர் படிப்பை மறந்து இணையத்தில் அமானுஷ்யங்களை தேடுவதில் மூழ்கிக்கிடந்ததாக கூறப்படுகின்றது. தேர்வு நாளன்றும் அப்படி இருந்ததால் இதனை கண்ட அவரது பெற்றோர் மிதுனை கடுமையாக திட்டி தேர்வில் கவனம் செலுத்துமாறு கண்டித்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனது பெண் தோழியை, செல்போனில் தொடர்பு கொண்டு வாழப்பிடிக்கவில்லை என்று விரக்தியுடன் கூறியுள்ளார்.

மேலும் தனது ஸ்மார்ட் போனில் உள்ள யூடியூப் பக்கத்தில் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளவது எப்படி ? என்று பல வீடியோக்களை மிதுன் தேடிச்சென்று பார்த்துள்ளார். தன் ஊருக்கு அருகாமையிலேயே தற்கொலை செய்வதற்கு உகந்த இடங்கள் எவை ? என கூகுளிலும் தேடிப் பார்த்துள்ளார். அதன் தொடர்ச்சியாக நூல் வாங்கி வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

அவனது வீட்டில் தொடங்கி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு சிசிடிவி காட்சிகளையும் போலீசார் மூன்று நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது தலையில் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் மிதுன், திருவட்டார் அழகியமண்டபம் வழியாக சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குளச்சல் கடற்கரை பகுதிக்கு சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து 10 ந்தேதி குளச்சல் கடற்கரை பகுதியில் நின்ற மிதுனின் இருசக்கர வாகனத்தை மீட்ட போலீசார், மிதுன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து தேடத்தொடங்கினர். அதன்படி 11ஆம் திகதி காலை மீனவர்கள் உதவியுடன் படகில் குளச்சல் கடலுக்குள் சென்று பார்த்த போது தூண்டில் வளைவு கோர் லாக் கற்களுக்கிடையே மிதுனின் சடலம் சிக்கியிருப்பதை கண்ட போலீசார் அதனை கயிறு கட்டி மீட்டனர்.

அமானுஷ்ய கதைகளுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள இயலாமல் தவித்த மிதுன் , தனது பெற்றோரும் திட்டியதால் யூடியூப்பை பார்த்து வலியில்லாமல் சாக வேண்டும் என்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரது சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிதுன் மாயமான வழக்கு, குளச்சல் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் உன்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டாங்க எவரி மேன் பார் கிம்செல்ப் என்று மிதுன் சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே வெளியிட்டிருந்த வீடியோ தற்போது கிடைத்துள்ளது.

அமானுஷ்ய கதைகளுக்கு அடிமையானதால் மனதில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அந்த மாணவன் விபரீத முடிவை தேடிக் கொண்டதாக கூறும் போலீசார் வாழ்க்கையில் கடுமையான தருணங்களை தைரியமாக எதிர் கொள்ளுங்கள் என்றும் உளி தாங்கும் கற்களே அழகிய சிற்பங்கள் ஆகின்றன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கேஜ்ரிவால்” – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

Pagetamil

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

Pagetamil

ரூ.200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி!

Pagetamil

Leave a Comment