யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 5 மணி அளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை, சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி உயிரிழந்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலிருந்த அவர் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி கற்று, தற்காலிக உதவி விரிவுரையாளராக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




