சீனாவின் தியான்ஜின் நகரில் 14 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

Date:

சீனாவின் வடக்கே உள்ள தியான்ஜின் நகரில் சுமார் 14 மில்லியன் பேருக்கு COVID-19 பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், மக்கள் வீட்டில் இருக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அண்மையில் அந்நகரில் 20க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் இருவருக்கு ஓமைக்ரோன் பாதிப்பு இருந்தது.

தொற்று உள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகே தியான்ஜின் உள்ளதால் இப்போது அந்நகரில் பெரிய அளவில் COVID-19 பரிசோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முடக்க நிலை ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

COVID-19 தொற்று அறவே இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது சீனா. அதனால் ஒருசில தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டாலே விதிமுறைகளை அது கடுமையாக்கத் தொடங்கிவிடுகிறது.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஸ்மார்போர்ட் வழங்கி வைப்பு

காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும்...

நிந்தவூர் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்ரியாஸுக்கு தேசிய மட்டத்தில் 3 கௌரவங்கள்

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்   வை....

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்