நடிகராக அறிமுகமாகிறார் பாடகர் சித் ஸ்ரீராம்!

Date:

பிரபல பிண்ணனிப் பாடகர் சித் ஸ்ரீராம் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிண்ணனி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதன் பிறகு சித் ஸ்ரீராம் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த என்னோடு நீ இருந்தால் பாடலை பாடியதன் மூலம் பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும் இவர் சிறந்த பிண்ணனி பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

இப்படியெல்லாம் சித் ஸ்ரீராமை தெரியாதவர்களிற்கு கூட, அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான “உள்ளத்தில் நல்ல உள்ளம்“ பாடல் மூலம் நன்கு பரிச்சயமாகியிருப்பார்!.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சிறந்த பிண்ணனி பாடகராக உள்ள சித் ஸ்ரீராம் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயமோகன் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் முண்ணனி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மணிரத்னம் தற்போது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

‘ஏய்… நீ ரொம்ப அழகாயிருக்கிறாய்’: கொழும்பில் இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம்!

மாளிகாவத்தை பகுதியில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் கொழும்பு...

பேருந்து கட்டணம் உயராது!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட...

காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்