‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

Date:

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ‘ஐஸ்’   போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 2 கிராம் வீதம் மொத்தம் 4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் சம்மாந்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயதுடைய சந்தேகநபர் சம்மாந்துறை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டவராவார். இவர் ஏற்கனவே பல முறை போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளி என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை  கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையிலும்  அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிநடத்தலிலும்  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார்   நெறிப்படுத்தலிலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக தீவிர விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...

திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது...

இஸ்ரேல் சென்ற விமானத்தை நடு வானில் கவிழ்க்க முயற்சி?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்