காரைதீவில் சமூக பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Date:

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ், காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சமூக பராமரிப்பு நிலையம் (Social Care Center) இன்று (30) உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் PSDG – 2025 வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த சமூக பராமரிப்பு நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ டாக்டர் ஜயந்த லால் ரத்னசேகர உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி ஜி. நவஜீவனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், சமூக பிரதிநிதிகள் மற்றும் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், காரைதீவு பிரதேசத்தின் தற்போதைய அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் ஆழமாக உரையாற்றினார்.

குறிப்பாக காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வடிகான் நிர்மாணம் மற்றும் புனரமைப்பு, வீதி அபிவிருத்தி, முறையான நீர் வடிகால் கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

மழைக்காலங்களில் ஏற்படும் நீர்தேக்கம், மக்கள் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்திற்கொண்டு, திட்டமிட்ட அடிப்படையில் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

காரைதீவு பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் அபிவிருத்தித் தேவைகளை நேரடியாக எடுத்துரைத்த தவிசாளர் பாஸ்கரன், வடிகான் நிர்மாணம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு பணிகளுக்கு மாகாண மட்டத்தில் முன்னுரிமை வழங்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் டாக்டர் ஜயந்த லால் ரத்னசேகரவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் உரிய கவனம் செலுத்தி, சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தேவையை ஆளுநரிடம் அவர் எடுத்துரைத்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சமூக பராமரிப்பு நிலையம் பிரதேச மக்களின் சமூக நலத் தேவைகளுக்கு பயனளிக்கும் அதேவேளை, காரைதீவு பிரதேசத்தின் நீண்டகால உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்...

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஏனைய...

திலினி பிரியமாலியை கைது செய்ய உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் திலினி பிரியமாலியை கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்