24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் பேரணி: அதிரடி திட்டத்தால் தடைமுயற்சி பிசுபிசுப்பு!

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

மட்டக்களப்பில் முன்னர் திட்டமிட்டிருந்த இடத்தில் பேரணி நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில், திடீர் ஏற்பாடாக இடம்மாற்றம் செய்யப்பட்டு, போராட்டம் இடம்பெற்றது.

வந்தாறுமூலை பனிங்கையடி ஆலயத்திலிருந்து சித்தாண்டி வரை போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் போராட்டம் நடக்கவிருந்த நிலையில்,  அங்கு பெருந்தொகையான பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், திடீரென இடமாற்றப்பட்டு போராட்டம் இடம்பெற்றது. எனினும், அங்கும் வந்த பொலிசார் வழிமறித்து இடையூறு ஏற்படுத்த முயன்றனர். ஆனால் அதை தாண்டி போராட்டம் நடந்தது.

நீதிமன்ற தடையுத்தரவை வழங்க பொலிசார் முயன்ற போதும், அதை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பிக்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.நடராசா, முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் நகுலேஸ், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலன் சுவாமிகளும் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் இந்த போராட்டத்தை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளத்தில் வீணான வயல்: விவசாயிகளின் கண்ணீருக்கு தீர்வு யார்?

east tamil

சம்பூரில் ஜப்பான் தூதுவர் குழுவின் விஜயம்: குளம் புனரமைப்பு திட்டம்

east tamil

அம்பாறையில் கரை ஒதுங்கிய உயிரிழந்த கடலாமைகள்

east tamil

அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையில் நினைவு தினமும் நல உதவியும்

east tamil

திருவள்ளுவர் சிலைக்கும் தடை: கல்முனையில் நிலைமை!

Pagetamil

Leave a Comment