பயோடேட்டாவை படிக்காமல் அஞ்சனாவை ஒரு தலையாக காதலித்து மூக்குடைபட்ட ரசிகர்!

Date:

தொலைக்காட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் அஞ்சனா ரங்கனிடம் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு அவர் கூலாக பதில் சொல்லி இருக்கிறார்.

சன் தொலைகாட்சி உள்பட தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சன ரங்கன். இவர் ’கயல்’ படத்தில் நடித்த சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்த பிறகு சிலகாலம் தொகுப்பாளினி பணியில் இருந்து ஒதுங்கி இருந்த அஞ்சன ரங்கன் தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும், விழாக்களை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ படத்தின் வெற்றி விழாவை இவர் தொகுத்து வழங்கினார் என்பதும் அதில் சில சர்ச்சைகளும் ஏற்பட்டது.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அஞ்சனாவிடம் ரசிகர் ஒருவர் ’நான் உங்களை காதலிக்கிறேன், நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேள்வி கேட்டபோது, ‘எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான்’ என்று கூற, அதற்கு ’உங்களுடைய பயோடேட்டாவை படிக்காமல் இந்த கேள்வியை கேட்டு விட்டேன்’ என்று அந்த ரசிகர் கூற, அதற்கு அஞ்சனா ’நோ ப்ராப்ளம்’ என்று கூலாக பதில் கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்