கலவான பிரதேசசபையின் எதிர்க்கட்சி தலைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சபை தவிசாளர், உபதவிசாளர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதேசசபை எதிர்க்கட்சி தலைவர் சானக மெல்லிகொட, கடந்த 15ஆம் திகதி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
கலவான பிரதேசசபையின் மாதாந்த கூட்டம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவரும் கலந்து கொண்டிருந்தார்.
அன்றைய கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கலவான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். அவர்களில் 16 பேர் பிரதேசசபை உறுப்பினர்கள்.




