லிந்துலையில் தேவாலயமும், தபாலகமும் சேதம்: பெண் ஒருவர் கைது!

Date:

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாகசேனை நகரத்தில் இயங்கும் தபால் நிலையம் நேற்று இரவு உடைக்கப்பட்டு பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதேவேளை தபாலகத்திற்கு முன்பாக உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவ ஆலயத்தின் முன்பகுதியில் காணப்பட்ட கிறிஸ்தவ சுரூபமும் உடைக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆலயத்தின் முன்பகுதியில் இருந்த ஏனைய பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் லிந்துலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின், குறித்த தபால் நிலையத்தில் உள்ள சமயலறைக்கு சென்ற பொழுது, அங்கிருந்த 38 வயது மதிக்கதக்க பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொள்ளும் லிந்துலை பொலிஸார், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரரணைகைளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.110 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹாஷ்...

இலங்கை கடவுச்சீட்டுக்கு தரவரிசையில் 93வது இடம்

2026-ல், ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இலங்கையின் கடவுச்சீட்டு 93-வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது....

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இலங்கையர்

சோமாலியக் கடற்கரைக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்த, 17 பணியாளர்களுடன் இருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்