ஒன்றுகூடல்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள் அல்லது அதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு உரிய அதிகாரிகளின் முன் அனுமதியைப் பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.




