வவுனியாவில் புகையிரத விபத்தில் பெண் பலி

Date:

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைப் பயன்படுத்திய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததில், அதில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் வெளியான சுரேஸ் சல்லேவின் மருத்துவ அறிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு; 15 பேர் குற்றவாளிகள்: 9 பேர் விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக்...

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்