குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் வெலிக்கடை, இராஜகிரிய, பெலவத்தை மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில் அதிகளவில் நடமாடியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல்களை அறியும் பொதுமக்கள் 071- 8591762, 071- 8594921 அல்லது 071- 8594913 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.




