இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் இதனைத் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வரவு-செலவுத் திட்டங்களுக்குத் தமது கட்சி ஆதரவு அளித்திருந்த போதிலும், இம்முறை வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சி. சிறீதரன் மேலும் விளக்கமளித்தார்.




