32 ஆவது வாரமாகவும் தொடரும் மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம் – உல்லாச விடுதிகளின் வருமானத்திற்காகவா காணி விடுவிப்பு தாமதம்? எனவும் கேள்வி!

Date:

தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி மயிலிட்டி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் 32 ஆவது வாரமாகவும் வலிசுமந்த உணர்வுகளுடன் இன்றும் (27.11.2026) முன்னெடுக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் அடிப்படையாக விளங்கும் பூர்வீகக் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், குறித்த காணிப் பகுதிகளில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், உல்லாசத்துறை சார்ந்த பயன்பாடுகள் இடம்பெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தல்செவன உல்லாச விடுதியை அண்மித்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இராணுவப் பங்களா என்ற போர்வையில் அமைந்துள்ள பகுதிகளைச் சூழவுள்ள நிலங்களிலும் விவசாயச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
மக்களின் காணிகள் அவர்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டிய நிலையில், அவை இராணுவத்தின் விவசாயத் தேவைகளுக்கும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறான பயன்பாடுகளே காணி விடுவிப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், கடற்கரையை அண்டிய மக்களின் பூர்வீக நிலங்களிலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சில பகுதிகள் உல்லாச இடங்களாகவும் உல்லாச விடுதிகளாகவும் பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனவே, மயிலிட்டி மக்களின் காணிகள் தொடர்பான உண்மை நிலையை ஆராய்ந்து, மக்களுக்குச் சொந்தமான காணிகளில் அனுமதியற்ற விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை தடுத்து,
துறைசார் அரச அதிகாரிகள், காணி ஆணையாளர் திணைக்களம், மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் உரிய கவனம் செலுத்தி, மக்களின் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை உரியவர்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் 32 வாரங்களாகத் தொடரும் மக்களின் காத்திருப்புக்கு எப்போது முடிவு கிடைக்கும்? பூர்வீக நிலங்கள் மக்களுக்கா அல்லது வருமானம் ஈட்டும் வேறு நடவடிக்கைகளுக்கா?
மயிலிட்டி மக்களின் இந்தக் கேள்விகளுக்கு உரிய தரப்பினர் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை  விடுத்தனர்.
spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்