நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

Date:

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, அரச நிறுவனங்களின் சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் பரீட்சை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை

எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளைத் தடையின்றி நடத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான தயாரிப்புகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளுக்கும் உத்தரவு

இதற்கிடையில், தொடருந்து சேவை, இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் சுகாதாரத் துறைகளிலும் பொதுமக்களுக்கான சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழிற்சங்கப் போராட்டங்கள் இடம்பெறும் காலப்பகுதியிலும் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

இதேவேளை, போராட்டங்களை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்து சில தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும் கல்வி, போக்குவரத்து மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்