27.6 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

அம்பிகையின் போராட்டத்தை கருத்தில் கொண்டு தீர்வை தாருங்கள்!

அம்பிகை அம்மையாரின் அகிம்சை முறையிலான போராட்டத்தினை உடனடியாக கருத்தில் கொண்டு சர்வதேச தரப்புக்கள் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் அக் கட்சியின் இளைஞர் அணி பிரமுகரும் சமூக ஆர்வளருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல் மற்றும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை திறம்பட விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் வடகிழக்குத் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதுடன், சுயநிர்ணய உரிமை கோரும் உரித்துடையவர்கள் என்பதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்மானிக்கும் வகையில், ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைக்கவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தி அம்மையாரின் உணவு தவிர்ப்புப் போராட்டம் 15வது நாளாக நடைபெற்று வருகின்றது.

தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு பிரித்தானியாவும் பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயம் உள்ளது. காலணித்துவ ஆட்சியின் முன்னர் தமிழர்களின் தேசமாகவே வாழ்ந்திருக்கிறோம்.

சிங்கள அரசிற்கு சுதந்திரத்தை வழங்கும்போது, தமிழர்களுக்குரிய அபிலாசைகளை வழங்கும் வகையில் பிரித்தானியா செயற்பட்டிருந்தால், தமிழர்கள் மேல் சிங்கள அரசு மேற்கொண்ட இனவழிப்பைய சந்தித்திருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

தமிழ்மக்களாகிய நாம் இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் வாழ்ந்து வருகின்றோம்.

அம்பிகை அம்மையாரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டதிற்கு பிரித்தானிய அரசு தனது கதவுகளை திறக்க முன்வரவேண்டும். அத்துடன், ஏனைய சர்வதேச சக்திகளையும், தமிழர் தரப்பின் நீதிக்காக செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த சிங்கள பேரினவாதிகள் 2009 இறுதி போரில் கொன்று குவித்தது தமிழ் மக்களை மட்டுமே. அது இன படுகொலையேயாகும்.

சிங்கள அரசு சிறுபான்மை மக்களாகிய தமிழர்கள் மீது இறுதி போரில் (முல்லைத்தீவு மாவட்டத்தில்) மேற்கொண்ட கோரத்தாண்டவம் முள்ளிவாய்க்கால் மண்ணில் அரங்கேறியது. அது இனப்படுகொலை என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த சம்பவங்கள் இன்றும் எம் மனக்கண்முன்னே நிஜமாக காட்சி தருகிறது. இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் அதே சிங்கள பெளத்த் நாட்டு அரசுக்கெதிராக நீடித்து வந்த உள்நாட்டுப் போர் உலக நாடுகளின் உதவியுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பாக 2009ம் மே ஆண்டு முள்ளிவாய்க்கால் இன படுகொலைகளுடன் நிறைவடைந்தது.

இலங்கை இறுதிப் போரின் போது பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல்மேற்கொண்ட இன அழிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகளிகள் மேற்கொண்டஆயுதம் போராட்டத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் உலக நாடுகளின் உதவியுடன் தமிழர்களை சிதறி பலியாக்கினார்கள்.

கைக்குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள்,பெரியவர்,வயோதிபர் என வகை தொகை இன்றி இலங்கை இராணுவத்தின் கோரத்தாண்டவத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் ஆகுதியான அந்த நெஞ்சம் மறக்காத நீங்காத நினைவை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.

தமிழர் மேல் பௌத்த சிங்கள பேரினவதிகள் மேற்கொண்டது இனப்படுகொலை என்பதை உலகுக்கு பறை சாற்றுவதும் எமது கடமை மட்டுமல்லாது இனப்படுகொலைக்கு நீதியான தீர்வு வேண்டும் என்பதையும் உலக நாடுகளுக்கு உரக்க சொல்வோம்.

எமதுமண்ணின் விடிவுக்காக எமது மண்ணில் உயிர்நீத்த எமது உறவுகள் எந்தநோக்கத்திற்காக உயிர்நீத்தார்களோ அந்த உயரிய நோக்கம் நிறைவேற தமிழ் தேசியபற்றுறுதியுடன் எம்மை நாமே பலப்படுத்தி ஒற்றுமையாக செயல்பட்டு எமது இலட்சியத்தை வென்றெடுக்க அம்பிகை அம்மையாரின் உறுதியோடு நாமும் ஒன்று சேர்ந்து உறுதி எடுப்போம். தொடர்ந்தும் உழைப்போம் எனவும் அம்மையாருக்கு எதுவேணும் நடைபெறுமாயின் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை தான் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர போவதாக இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் அக் கட்சியின் இளைஞர் அணி பிரமுகரும் சமூக ஆர்வளருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

east tamil

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முடிவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும் – அநுர

east tamil

யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது – கடற்படையின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயம்

east tamil

அரிசி விற்பனையில் கலப்பு!

east tamil

Leave a Comment