யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு

Date:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் நடைமுறை செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் எந்தவொரு செயலும் அனுமதிக்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

மேலும், அதேபோன்று தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதானால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னர் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்தக்கட்டம் தொடர்பில் சிந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கருத்துகளை வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அரசாங்கம், கல்வி மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளில் தடை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டையும் சகிக்கப்போவதில்லை என்றும், அனைத்து தரப்பினரும் விவகாரங்களை ஆராய சுமூகமான முறையில் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட சூழலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், கல்வி தொடர்பான நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்