சிம்புவின் நெருங்கிய நண்பரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரும், நடிகருமான மகத் கடந்த ஆண்டு பிராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மக்த்-பிராச்சி தம்பதிகள் தங்களது குழந்தைகளுக்கு அதியமான் ராகவேந்திரா என்று பெயர் வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் மகத் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் மகத் தற்போது ’கெட்டவன்னு பெயர் சொன்ன நல்லவன்டா’ ’இவன் தான் உத்தமன்’ ’காதல் கண்டிஷன் அப்ளை’ மற்றும் ’சைக்கிள்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




