முறாவோடை தமிழ் கிராமத்துக்கான பிரதான பாதை புனரமைப்பு!

Date:

மிக நீண்டகாலமாக சீரற்ற நிலையில் காணப்பட்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் முறாவோடை தமிழ் கிராமத்துக்கான பிரதான பாதையின் சீரற்ற நிலைமை குறித்து பிரதேச மக்களினால் விடுத்த வேண்டுகோளின் கீழ் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின்
வேண்டுகோளின் கீழ் வீதி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் 24 மில்லியன் ரூபா நிதி ஒதுகீட்டில் ஒரு கிலோமீட்டர் வீதி கொங்கிறீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திப் பணிகளில் நகரத்தையும் கிராமத்தையும் இணைக்கும் பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்வது மிக அவசியமான ஒன்றாகும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பின் தங்கிய கிராமங்களின் பிரதான வீதிகள் மற்றும் உள்வீதிகள் அபிவிருத்தி செய்வதற்கான வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்