வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சரத் சந்திர!

Date:

வவுனியா மாவட்ட புதிய அரச அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய சிங்கள மொழி பேசும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா அரச அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளர். இந்த நியமனத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும், அரசாங்கம் அதை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.

இதனையடுத்து கடந்த ஒரு மாதகாலமாக மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய தி.திரேஸ்குமார் பதில் அரச அதிபராக பொறுப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் பௌத்தசாசன அமைச்சில் முக்கிய பதவியினை வகித்த சரத் சந்திர வவுனியா மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் நாளையதினம் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

‘ரொக்சிக்’ காதலனை ஆள் வைத்து அடித்த காதலி

தன்னுடைய காதலன் அளவுக்கு அதிகமாக உரிமை பாராட்டுவதாகவும், தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக்...

மதுரை நகைக்கடையில் கொள்ளை அடித்த தனி ஒருவனின் பின்புலக் கதை!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ‘இன்ஸ்டா’ தோழி மீனாட்சியுடன் சேர்ந்து திட்டமிட்டு தனி...

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்; இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கப் பிரதேசம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்