யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு இளையவர்களிற்கு சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சையாகும்.
இணுவில் பகுதியில் 9ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கராஜா பிரிஞ்சன் என்ற இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது இரண்டு சிறுநீரகங்களும் தானம் வழங்கப்பட்ட நிலையில், இயந்திரங்களின் உதவியுடன் உயிர்வாழ்ந்த இரண்டு சிறுநீரக நோயாளிகளிற்கு பொருத்தப்பட்டது.
இது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.




