நியூஸிலந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று புதிய உச்சமாக 62 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.
8 நாள்களாகத் தேசிய முடக்கநிலை நடப்பிலுள்ளது.
நியூசிலந்தின் ஆகப்பெரிய நகரான ஒக்லந்தில் இம்மாத இறுதிவரை முடக்கநிலை நீடிக்கக்கூடும்.
மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி நாளை மறுநாள் பரிசீலிக்கப்படும்.
நேற்று மட்டும், இதுவரை இல்லாத அளவில் 80,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.




