26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா விடுதியில் தங்கியிருந்தவர் திடீர் மரணம்!

வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென இறந்த சம்பவம் ஒன்று நேற்று (6) இரவு நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்-

வவுனியா முதலாம் குறுக்கு தெருவிலுள்ள கௌரி விடுதியில் தெகிவளையை சேர்ந்த ஒருவரும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்களும் தங்கியிருந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் கொழும்பு தெகிவளையில் வருகைதந்து தங்கியிருந்தவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதையடுத்து கௌரி விடுதிக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் விடுதியில் வந்து தங்கியிருக்கின்றார்கள்.

இவர்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென மயக்கமுற்று தெகிவளையை சேர்ந்த குறித்த நபர் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் 1990 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு மற்றைய நண்பன் கொண்டு சென்றிருக்கிறார். குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னரே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கொழும்பு தெகிவளையை சேர்ந்த 48 வயது ஜெகநாதன் உதயராஜ் என்பவரே மரணமடைந்துளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர் திடீரென எவ்வாறு இறந்தார், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் மரணித்தவருக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக குறித்த நபரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

Leave a Comment