மலையகத்தில் ஊரடங்கில் மதுபானம் விற்றவர் கைது!

Date:

கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 124 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என்றும் கூறினர்.

நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

க.கிஷாந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்