கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் பலி!

Date:

கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் இன்று (22) மாலை இடம்பெற்ற வீதிவிபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வான் ஒன்றும் நேர் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் வானின் சாரதியின் தூக்கக் கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

வானின் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்