24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

தினமும் தலைக்கு குளிப்பதால் இத்தனை பிரச்சினைகள் ஏற்படுகின்றதா?

தினமும் தலைக்கு ஏன் குளிக்கக் கூடாது … அப்படி குளிப்பதால் தலைமுடிக்கு என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் …

பெண்கள் அனைவரும் அதிகமான முடியை வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்கு அவர்கள் பல முடி தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலர் கொஞ்சம் அதிகமாக தினமும் முடியை அலசும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது முடிக்கு பல்வேறு நன்மை அளிக்கிறது மற்றும் முடி நீண்டு வளர முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. தலைமுடியை தினமும் கழுவுவது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

அதிகமான அடர்த்தியான தலைமுடி கொண்டிருப்பது இங்கு அழகான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட தலைமுடியை பெறுவதற்கு நாம் பல்வேறு எண்ணெய்களையும் தலைமுடிக்கு விற்கப்படும் தயாரிப்புகளையும் பயன்படுத்துகிறோம். இதனால் முடி ஆரோக்கியமாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர்.

ஷாம்பு பயன்பாடு

தற்சமயம் ஷாம்பு, ஹேர் கண்டிஷனர் அதிகமாக விற்பதற்கு இதுவே முக்கிய காரணம். மேலும் நாம் அன்றாடம் வேலைக்கு செல்தல் என பல விஷயங்களுக்காக வெளியே சுற்றிக்கொண்டே இருக்கிறோம். இதனால் தலைமுடியானது அதிகப்படியாக மாசுபாடு அடைகிறது. இந்த மாசுப்பாட்டை நீக்கவும் ஷாம்புகள் நமக்கு உதவுகின்றன.ஆனால் சிலர் தங்கள் முடியை பராமரிப்பதற்காக தினமும் ஷாம்புவை பயன்படுத்தி தலைமுடியை அலசுகின்றனர். உண்மையில் தலையை சுத்தம் செய்ய ஷாம்புவை பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான விஷயம் என்றாலும் அதை தினமும் செய்வது தலை முடிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே தினமும் ஷாம்பு பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தினால் அதனால் நாம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை இப்போது விரிவாக பார்க்கலாம்.

பிரகாசத்தை மங்க செய்கிறது

இயற்கையாகவே தலைமுடி பள பளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கும். பலரும் தங்கள் முடியின் பிரகாசத்தை விரும்புவதுண்டு. விளம்பரங்களில் பெண்களின் முடியானது பள பளப்பாக இருப்பதை அனைவரும் பார்க்க முடியும். ஆனால் நாம் அடிக்கடி தலைமுடிக்கு ஷாம்புவை பயன்படுத்தும் போது அது முடியின் பிரகாசத்தை படி படியாக குறைக்கிறது. இதனால் முடியானது கொஞ்சம் கொஞ்சமாக தனது பிரகாசத்தை இழக்கிறது. இதனால் அதிகமாக ஷாம்பு பயன்படுத்தி தினமும் தலையை அலசுபவர்கள் நாளடைவில் தங்கள் முடியின் பொலிவை இழக்க நேரிடும்.

வறண்ட கூந்தல்

சிலருக்கு சாதாரணமாகவே வறட்சியான கூந்தல் இருக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளும் முடியை அலச வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தினமும் தலைமுடியை அலசுவதால் அதில் பல ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் உங்கள் தலைமுடி வறண்டு வெளுத்து காணப்படுகிறது. மேலும் இதனால் முடி அதிகமாக சேதமடைகிறது. இது முடி உதிர்தலுக்கு வழி வகுக்கலாம். மேலும் தலைமுடியில் சிக்ஸ் உருவாவதற்கு இது காரணமாக இருக்கலாம். தலைமுடியில் சிக்கு ஏற்பட்டால் அதை சரி செய்வது மிகவும் கடினமாகும். மேலும் இதனால் தலை முடியை சீப்பை கொண்டு சீவும்போது அதிக முடி உதிர்வதை காண்பீர்கள்.

உச்சந்தலை வறட்சி

சாதாரணமாக தலைமுடியை அலசுவது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நமது தலைமுடிகளின் ஆரம்பகட்டமாக உச்சந்தலை உள்ளது. நாம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை இது தடுக்கிறது. ஆனால் அடிக்கடி முடியை அலசுவது என்பது முடிக்கு கேடு விளைவிப்பது போலவே நமது உச்சந்தலைக்கும் கேடு விளைவிக்கிறது. இதனால் உச்சந்தலையில் ஈரப்பதம் இல்லாமல் போய்விடுகிறது. இது இயற்கையான சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதை உலர வைக்கிறது.

பொடுகு ஏற்படலாம்

சில தலையில் பொடுகு ஏற்படக்கூடாது என்பதற்காக தினமும் ஷாம்புவை பயன்படுத்துங்கள். ஆனால் தினமும் ஷாம்புவை பயன்படுத்துவதால் பொடுகு ஏற்படுகிறது என கூறினால் அவர்களுக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக இருக்கலாம்.

சாதாரணமாக சிலருக்கு தலையில் பொடுகு ஏற்பட்டது அது உச்சந்தலையில் செதில் செதிலாக இருக்கும். ஷாம்புவை பயன்படுத்துவதால் அவை நீங்கும். ஆனால் அடிக்கடி தலைமுடியை அலசுவதால் அது மீண்டும் முடியில் பொடுகு ஏற்படுத்தலாம். மேலும் இதனால் உங்கள் தலைமுடி அதன் ஆரோக்கியத்தையும் இழக்கிறது.

முடி உடைதல்

அடிக்கடி முடியை அலசுபவர்கள் முடியை காய வைப்பதற்காக சூரிய ஒளி அல்லது ஹேர் ட்ரையரை. இதனால் முடியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதனால் முடி உடைதல் ஏற்படலாம். முடி உதிர்வை விட முடி உடைதல் மோசமான விஷயமாகும். இது முடியின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது. நீங்கள் உங்கள் முடியை சீப்பால் சீவும்போது குறுகிய முடிகளை காண்கிறீர்கள் எனில் நீங்கள் முடி உடைப்பு பிரச்சனையில் உள்ளீர்கள் என அர்த்தம்.

சேதமடைதல்

ஈரமாக இருக்கும் முடியை சீப்பை கொண்டு சீவ வேண்டாம் என நம் அம்மா சொல்லி கேட்டிருப்போம். உண்மையில் அவர்கள் கூறுவதில் காரணம் உண்டு. காரணமாக ஈரமான கூந்தலானது சேதமடைவதற்கு உடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் தலைமுடியை கழுவுகிறீர்களோ அவ்வளவிற்கும் அது சேதத்தை ஏற்படுத்துகிறது.எனவே உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக பாதுக்காப்பது முக்கியம்தான் என்றாலும் அதற்காக தினமும் நாம் முடியை அலச வேண்டிய அவசியமில்லை. ஆனால் தினமும் முடி அலசுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். ஒரு வேளை உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் நீங்கள் தினமும் முடியை அலசலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

Leave a Comment