26 C
Jaffna
January 20, 2025
Pagetamil
லைவ் ஸ்டைல்

லிப்ஸ்டிக்கில் இத்தனை நச்சுப் பொருட்களா!

இன்று பழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான லிப் க்ளோஸ், லிப்ஸ்டிக்கில் குரோமியம், ஈயம், அலுமினியம், கட்மியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பல நச்சு பொருட்கள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* லிப்ஸ்டிக்கில் ஒருசில நச்சுப்பொருட்கள் உள்ளன. இந்த நச்சுத்தன்மையை உடல் உறிஞ்சுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயம் தெரியாமல் நிறைய பேர் லிப்ஸ்டிக்கை அதிகம் உபயோகிக்கிறார்கள். லிப்ஸ்டிக் வாங்குவதற்கு முன்பு அதில் உள்ளடங்கி இருக்கும் பொருட்களை கவனியுங்கள். அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

* லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது உதடுகளில் திடீரென்று அரிப்பு ஏற்பட்டால் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அது ஒவ்வாமை பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். லிப்ஸ்டிக்கில் பிஸ்மத் ஆக்ஸி குளோரைடு என்ற இரசாயனம் உள்ளது. இந்த மூலப்பொருள் புற்றுநோய்க்கு வித்திடக்கூடியது. அதனால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான இரசாயன பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால், லிப்ஸ்டிக் மூலம் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். லிப்ஸ்டிக் கெட்டுப்போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

* லிப்ஸ்டிக்கில் பெட்ரோ கெமிக்கல்கள் உள்ளன. இவை நாளமில்லா சுரப்பி அமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக அறிவாற்றல் மற்றும் இனப்பெருக்க திறன்களில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

* தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் விளைவாக, சிறுநீரக செயலிழப்பும் ஏற்படலாம். லிப்ஸ்டிக்கில் அதிக அளவு கட்மியம் இருப்பதால் இது ஏற்படுகிறது. வயிற்று கட்டிகளும் இந்த நச்சு இரசாயனத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மற்றொரு பிரச்சினையாகும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

east tamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

Leave a Comment