ஆட்டு மசாலா செய்வது எப்படி!

Date:

ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி!

தேவையான பொருள்கள்:

ஆட்டு மூளை – 2

மிளகாய்தூள் – 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணை – 3 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆட்டு மூளை மேல் பகுதியில் தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும். மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

கிண்ணியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசாலா கலந்த மூலையை சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

நன்றாக சிவந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.

சூப்பரான ஆட்டு மூளை மசாலா ரெடி.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்