டாஸ்மாக் வருமானம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்.
தமிழகத்தின் 2021 – 2022 ஆண்டிற்கான பட்ஜெட்டை முக ஸ்டாலின் தலைமையிலான அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். இதில் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ. 35,000 கோடியாக உள்ளது என்றும் மாநிலத்தில் வழக்கம்போல டாஸ்மாக் வருமானம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலை ரூ .3 குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி அறிவிப்பு என்றாலும் டீசல் விலை அப்படியே இருப்பது லாரி உரிமையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. தொடர்ந்து, பெட்ரோல் விலை குறைப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்றும் டீசல் விலையை குறைத்தால்தான் வாடகை குறையும், அதன் மூலம் பொருட்களின் சந்தை விலை குறையும்.
அரசு உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மளனம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுபோல அம்மா உணவகத்தை பற்றி எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படவில்லை ஆனால், எம்.ஜி.ஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ .1,725 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு, திருநங்கைகள் பயன்பாட்டு வகை ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ .1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ .1000 வழங்கும் திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், குடும்ப தலைவரின் பெயரை மாற்றுவதற்கும் தேவையில்லை. ஆனால், அந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட அரசு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.