யாழில் செல்லமாக வளர்த்த நாய் உயிரிழந்த சோகத்தில் 5 நாள் சாப்பிடாமல் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

Date:

வட்டுக்கோட்டையில் சம்பவம் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் covid-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (61) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.

அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளது. அந்த சோகத்தில் வயோதிபப் பெண் சாப்பிடாமல் இருந்துள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் வெளிநோயாளர் பிரிவில் அவர் உயிரிழந்துவிட்டார் என்பது தெரிய வந்தது.

அவரது சடலம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்