பருத்தித்துறை புலோலி பகுதியில் இரு சன சமூக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் சன சமூக நிலைய நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டதோடு சன சமூக நிலைத் தலைவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புலோலி தென்மேற்கு சன சமூக நிலையம் மற்றும் புலோலி வடமேற்கு சன சமூக நிலையங்களை இன்று முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலீஸாரின் அறிவித்தல்களையும் மீறி சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது சமூக இடைவெளிகளைப் பேணாது, முகக் கவசம் அணியாமல் விளையாட்டு நிகழ்வை நடாத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலீஸார், கிராம சேவகர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை மேற்கொண்டு நிகழ்வை நடாத்துவதற்கு காரணமான நிர்வாகிகளை தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தி வைக்கப்பட்டதோடு நிலையத்தின் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது. 




