யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தில் ஒலி அமைப்பை மேற்கொண்ட இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரியும் இன்று யாழ் நகரத்தில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதில் வாடகை அடிப்படையில் ஒலி அமைப்பை மேற்கொண்ட இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.




