வடக்கின் நேற்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகள்!

Date:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (8) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் வடமாகாணத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதில், யாழ் மாவட்டத்தில் 45 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 3 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவர் தொற்றிற்குள்ளானார். அவர் சந்நிதி அன்னதான மடத்தில் உணவு பரிமாறுபவர்.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளானார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளானார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதில் சுதுமலை பகுதியை சேர்ந்த 10 வயதான சிறுமியும் ஒருவர்.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுவனும் உள்ளடங்குகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் என 6 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் மாவட்டத்தில் மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும்,  மன்னார் பொது வைத்தியசாலையில் 2 பேரும் என 8 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், பொது வைத்தியசாலையில் ஒருவர் தொற்றிற்குள்ளானார்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 4 பேர், செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர் என 8 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர், முள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்