குறைந்த விலையில் வழங்கும் விநியோகஸ்தர் நிராகரிப்பு: வடக்கு கல்வி திணைக்களத்தின் சர்ச்சை நடவடிக்கை!

Date:

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் கணினிகளை வழங்க கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனத்தை தவிர்த்து விட்டு, அதிக விலையில் கூறுவிலை கோரிய நிறுவனத்திடம் கணினி கொள்வனவு செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டதால் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறைவான பெறுமதியில் கூறு விலை கோரல் வழங்கிய நிறுவனம் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணிணிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் 16.07.2021 திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விடவும் ஒரு கணிணிக்கு 11,500.00 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 11500 x 240 = 27,60,000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது, “குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம் கிடைப்பெற்றது. எனவே இது தொடர்பான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. 240 கணிணிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணிணிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது“ எனத் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்