தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

Date:

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக் கொடியோடு வலம் வரும் போக்கு அதிகரித்து வருகிறது. அரசு விதிக்கும் சட்டங்கள், விதிகளை மீறுவதை சிலர் முழுநேர செயல்பாடாகவே கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து மோட்டார் வாகனங்களும் போக்குவரத்துத் துறையால் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு, பிரத்யேக பதிவெண்ணுடன் வழங்கப் படுகிறது. வாகனத்தின் முன்னும் பின்னும் உள்ள நம்பர் பிளேட் பதிவெண் மூலம் வாகனம் திருடுபோனாலோ, விபத்து காலத்திலோ எளிதில் அடையாளம் காண முடிகிறது.

ஆனால் அரசியல்வாதிகள், உள்ளாட்சிப் பிரமுகர்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களின் பதிவு எண்கள் விதிமுறைகளின்படி சரியாக எழுதப்படுவது இல்லை. குறிப்பாக ஆளுங்கட்சியினரின் வாகனங்களில் நம்பர் பிளேட் இருப்பதில்லை. மாறாக கட்சிப் பதவியே காரை அலங்கரிக்கிறது.

இதனால் அந்த வாகனம் விபத்துக் குள்ளானாலோ அல்லது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டாலோ, உடனடியாக அந்த வாகனத்தின் பதிவு எண்ணை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. வாகனத்தில் இடம்பெற்றுள்ள ஆளும்கட்சியின் கொடியும், பதவியும் குற்றங்களில் ஈடுபடும் நபர் மீது காவல்துறையும், போக்குவரத்துத் துறையும் மோட்டார் வாகன விதிகளின் படி நடவடிக்கை எடுக்க தயங்கு வதற்கும் காரணமாகிறது.

இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், தற்போதைய ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள், அதன் கூட்டணிக் கட்சியினரும் இதேபோல் தான் செயல்படுகின்றனர். அவர்களின் காரை நிறுத்தினாலே பெரும் பிரச்சினையை சந்திக்கிறோம்.

தற்போது முதல்வரும் சில கண்டிப்பான நடவடிக் கைகளை எடுத்து வருகிறார். அண்மையில் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட் டில் அனைவரும் சுதந்திர மாக செயல்பட அறிவுறுத்தி யிருக்கிறார். எனவே நாங்களும், மோட்டார் வாகன விதிகளை மீறு வோர் எவராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இனி தயங்கமாட்டோம் என்றார்.

நம்பர் பிளேட்டுகள் எப்படி இருக்க வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் களிடம் கேட்டபோது, போக்கு வரத்து அபராதங்களில் இருந்து தப்பிக்கவும், பிற குற்றங்களுக் காகவும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தங்களது விருப்பத்திற்கேற்றவாறு மாற்றி பயன்படுத்தும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

இந்தச் சட்டத்தின் 39-வது பிரிவின்படி போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் இல்லாமல் நாட்டில் எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் ஓட்டுவது ஒரு குற்றவியல் செயலாகும். அண்மையில் அரசு, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டை (HSRP) கட்டாயமாக்கியுள்ளது. இதில் லேசர் கோடு, தனிப்பட்ட பதிவெண் ஆகியவை இருக்கும். வாகன வகைக்கேற்ப நம்பர் பிளேட் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எழுத்துக்கள் தெளிவாகவும் ஒரே நிறத்திலும் இருக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே விதிமுறைகளை மதித்து சரியான நம்பர் பிளேட்டை பயன்படுத்துவதே பாதுகாப்பான தும் சட்டப்படி சரியானதும் ஆகும். வாகன எண்கள் சட்டப்படி தெளிவாக இருக்க வேண்டும். காரணம் விபத்து அல்லது குற்றச் சம்பவங்களில் வாகனத்தை அடையாளம் காண எண்களே முக்கிய ஆதாரம்.

தவறான நம்பர் பிளேட் காரணமாக போலீஸாருக்கு அடையாளம் கண்டறிவதில் தடைகள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனம் முதல் பஸ், லாரி வரை பல வாகனங்களில் அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்களின் படங்கள் வரைந்து, பெயர்கள் எழுதுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. எண்களை சாய்த்து அல்லது அலங்கார எழுத்துகளில் எழுதுவது வழக்கமாகிவிட்டது. இப்படி செய்வது சட்டப்படி தவறானதாகும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

செம்மணி புதைகுழியில் உட்கார்ந்த நிலையில் எலும்புக்கூடு

செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்