25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நுகர்வுக்கு தகுதியற்ற 2000 கிலோ இறைச்சி எரித்தழிப்பு

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழிஇறைச்சி நேற்று எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை
வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் நேற்று (07)
சோதனைக்குட்படுத்திய வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றை கைப்பற்றி நீதிமன்றத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சியை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டதனையடுத்து சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் மாலை வவுனியா பாவற்குளம் மக்கள் குடிமனைகள் இல்லாத பகுதியில் உள்ள பொது இடத்தில் கோழி இறைச்சி தீ வைத்து எரித்தழிக்கப்பட்டது.

வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

Leave a Comment