பருத்தித்துறை, அம்பன் பகுதியில் கைத்துப்பாக்கி ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
அம்பன் பகுதியில் வீதி புனரமைப்பில் ஈடுபடும் ஒருவர், 5 கைத்துப்பாக்கி ரவைகளை அவதானித்து பொலிஸ் அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினார்.
இதையடுத்து, பருத்தித்துறை பொலிசார் நேற்று மாலை அந்த ரவைகளை மீட்டனர்.



