உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று: கண்டாவளை பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் செயலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமத்தினைச் சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் எழுமாற்றான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு கடந்த இரவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று பிரதேச செயலகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் மாதிரிகள் பெறப்படுகின்றன.

இந்நிலையில் உத்தியோகத்தர்களின் பிசிஆர் முடிவுகள் வெளிவந்த பின்னர் பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும், பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட மிக அவசியமான தேவைகளை அரச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்