வவுனியாவில் சந்தை உள்வட்ட வீதியைச் சேர்ந்த 11 பேர் உட்பட 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

Date:

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 11 பேர் உட்பட 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இரவு (25) வெளியாகியுள்ளன.

அதில் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியாவில மேலும் 14 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்