பரீட்சையில் பார்த்து எழுதியது பிடிபட்டதால் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை!

Date:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆசிரியர் தரம் தாழ்த்தி பேசியதால், மன உடைந்த கல்லூரி மாணவி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் அம்பத்தூர் அருகேயுள்ள புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி என்ற மாணவி முதலாம் ஆண்டு சுகாதாரவியல் பயின்று வந்துள்ளார். இவர் தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

செல்போனின் மூலம் விடைகளை பெற்றதாக கூறி, கண்டித்த ஆசிரியர் தரம் தாழ்த்தி பேசி, மாணவியை அறையை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்