4 அல்ல 40 திருமணமும் செய்வேன்; உங்களிற்கு என்ன பிரச்சனை?: வனிதா கேட்கிறார்!

Date:

நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணங்கள் கூட நான் செய்வேன் அது என் சொந்த விருப்பம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார், நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவலவாசனும் மணமகன், மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார் மணமகன்,மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்க்காகத்தான் போட்டோ ஷூட், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன். இது எனது அடுத்த திருமணமா என்று சமுக வலைதளத்தில் அனைவரும் கேள்வி எழுப்பினர். பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமாக ஒன்றாக உள்ளது.தற்கொலை, பாலியல் போன்றவை அதிகமாக தற்போது நடைபெற்று வருகிறது.

நடிகை நயன்தாரா பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் மிகவும் பெருமை படுகிறேன். அதற்கான உழைப்பையும், கஷ்டத்தையும் தாண்டி தான் அவர் வந்துள்ளார். பெண்களுக்கான சுதந்திரம் நிச்சயம் வேண்டும் அதற்கு பக்கபலமாக ஊடங்கங்கள் இருக்க வேண்டும். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன் அது எனது சொந்த விருப்பம் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...

முன்னாள் காதலி இப்போது என்ன செய்கிறாள்? – தகவல் அறியும் சட்டத்தில் 1,886 கேள்விகள் கேட்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் (22) என்​பவர், கடந்த 2021-2024 ஆண்​டுகளில்...

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்