அர்ஜூன் மகேந்திரன் இல்லாமல் வழக்கை தொடர தீர்மானம்!

Date:

தேவை ஏற்பட்டால், முதல் மற்றும் 10 வது பிரதிவாதிகள் இல்லாமல்  மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கை தொடர சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு முதல் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக மன்றாடியார் நாயகம் இதனை வெளிப்படுத்தினார்.

இந்த வழக்கின் முதல் பிரதிவாதி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், 10 வது பிரதிவாதி அஜான் கார்டியா புஞ்சிஹேவ ஆகியோர் இல்லாமல் வழக்க தொடரலாமா என மன்றில் வினவப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சம்பா ஜானகி ராஜரத்தினம் மற்றும் நமல் பலலே முன் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை ஒப்படைப்பது தொடர்பாக சட்டமா அதிபருக்கும் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கும் இடையில் கலந்துரையாடல் நடப்பதாக மேலதிக மன்றாடியார் நாயகம் பிரியந்த நாவன கூறினார்.

முதல் பிரதிவாதியுடன் வழக்கைத் தொடர முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, ​​மேலதிக மன்றாடியார் நாயகம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை ஒப்படைக்க விவாதங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார். அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்க முடியாவிட்டால், அவர் இல்லாத நிலையில் வழக்கைத் தொடர கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

63 வயது அவுஸ்திரேலிய அன்ரியுடன் உடலுறவு கொள்ள கடிதம் கொடுத்த 3 பேர் கைது!

உனவட்டுனவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை,...

பொதுவேட்பாளராகும்படி மைத்திரிக்கு முதல் என்னையே கேட்டனர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக, 2015...

பொலன்னறுவையில் நேற்று அதிக வெப்பம்

பொலன்னருவையில் நேற்று (செப்டம்பர் 2) நாட்டின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 37.9°C...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்